புதுடில்லி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு எதிரான நிலையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வேகப்படுத்தி வரும் வேளையில் மத்திய அரசு பாதுகாப்பு முக்கிய விஷயமாகவே கருதப்படுகிறது.தமிழகத்தில் சமீபகாலமாக சனாதன தர்மத்திற்கு எதிராக சில அரசியல் கட்சியினர் தங்களின் சுயலாபத்திற்காக காய் நகர்த்தி வருகின்றனர். கவர்னர் மீதான தாக்குதலை ஆளும்கட்சியினர் சட்டசபையில் வெளிப்படையாக கண்டன தீர்மானம் மூலம் தெரிவித்தனர். கவர்னர் மீது தமிழக அரசு ஜனாதிபதியிடம் நேற்று திமுக எம்பிக்கள் புகார் அளித்தனர்.பா.ஜ., தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதில் மிக மும்முரமாக உள்ளார். கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருப்பதை முதன்முதலாக பேட்டியில் தெரிவித்தார்.
இதன் பின்னரே போலீசார் விசாரணையை வேகப்படுத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சில அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டார். இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் விவரத்தை வெளியிட இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.இந்நிலையில் பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசின் ‘ ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு வழங்குவர். அண்ணாமலையை சுற்றி ஒன்று அல்லது 2 கமாண்டர் உள்பட மொத்தம் 33 பேர் வரை போலீசார் இருப்பர்.