நாடாளுமன்றத்தில் யூடியூப் சேனலான சன்சத் டிவி, இன்று அதிகாலை முடக்கப்பட்டு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நிகழ்வுகளை நேரலை செய்வதற்காக சன்சத் டிவி என்ற யூடியூப் சேனல் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாள்களில் அரசு சார்ந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சன்சத் டிவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சன்சத் யூடியூப் சேனல் இன்று அதிகாலை 1 மணியளவில் முடக்கப்பட்டது. சேனலை முடக்கியவர்கள் ‘இதெரியம்’ என்று பெயர் மாற்றினர். இருப்பினும், சன்சத் டிவியின் சமூக வலைதளக் குழு அதிகாலை 3.45 மணியளவில் சேனலை மீட்டது.
தொடர்ந்து யூடியூப் சேனல்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை நிரந்தரமாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளதாக தெரிவித்துள்ளனர்.