வேலை செய்த வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது.

கோவை மாவட்டம் சூலூர், நடுபாளையம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ். இவரது வீட்டில் பெயிண்டிங் வேலை நடந்தது. அப்போது செல்வராஜின் மருமகள் வெளியே செல்வதற்காக பீரோவை திறந்து நகைகளை பார்த்த போது தங்க செயின், மோதிரம், கம்மல் உட்பட 3 பவுன்தங்க நகைகளை காணவில்லை இதுதொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விரைந்து குற்றவாளியை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன்விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று தனிப்படையினர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தனம் மகன்சகாயராஜ்(வயது 30) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீட்டில்பெயிண்டிங் வேலை செய்த போதுநகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதன் பேரில் சகாயராஜ் கைது செய்யப் பட்டார். 3 பவுன் தங்க நகைபறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.