கோவை: காங்கேயம் அருகே உள்ள கடையூரை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் பிரிசன் (வயது 23) இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிச்சாமி நகரில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சின்ன காமண்ணன் வழக்கு பதிவு செய்து இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, மாதவன் நகரைச் சேர்ந்த நிகில் அருண்குமார் (வயது 20)என்பவரை நேற்று கைது செய்தார்.சாம் பிரவீன் ( வயது 19) என்பவர் தப்பி ஓடி விட்டார். இவரிடமிருந்து பைக் மீட்கப்பட்டது.தீபாவளி செலவுக்காக பைக் திருடியதாக விசாரணையில் தெரிய வந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0