திருவாரூர் மாவட்டம் தென்கரை வயல் பகுதியை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் சரவணன் (வயது 27 )கோவையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காந்தி பார்க் பகுதியில் தனது நண்பரை பார்க்க நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை மிரட்டி இவரிடம் இருந்த பையை பறித்துக் கொண்டு சென்று விட்டார்.. அதில் செல்போன், பணம் ரூ 1000 ஆயிரம் இருந்தது. இது குறித்து லட்சுமணன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தடாகம் ரோடு பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் மகன் லட்சுமணன் (வயது 20) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து செல்போன் பணமும் மீட்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0