வாவ்..சூப்பர்!! உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் :100 பெட்டிகள்; 1.9 கி.மீ நீளம் கொண்டதாம் … வியப்பில் ஆழ்ந்த பயணிகள்..!!

உலகிலேயே மிக நீளமான ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து ரயில்வே.

ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகவும் அழகான பாதையின் வழியாக ஜன்னல் ஓரத்தில் அமர்ந்த படி இயற்கையை ரசித்துச் செல்வது யாருக்கு தான் பிடிக்காது.

ரயில்களில் பயணம் செய்வது மட்டுமல்லாமல் வேடிக்கைப் பார்ப்பதும் கூட சுகமான ஒன்றுதான். ரயில்வே கேட்களைக் கடக்கும் போது ரயில்களின் பெட்டிகளை எண்ணாத குழந்தைகள் இல்லை எனலாம்.

இந்த ரயில்களின் பிரம்மாண்டத்தை எந்த அளவு அதிகரிக்க முடியுமோ அந்த அளவு அதிகரித்துள்ளது சுவிட்சர்லாந்து ரயில்வே. அவர்கள் உருவாக்கியுள்ள 100 பெட்டிகள் கொண்ட ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைப் பார்க்கலாம்.

1.9 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயிலானது மிக அழகான ரயில் பாதையின் வழியாக பயணிக்கிறது.

4550 இருக்கைகள் இதில் உள்ளன.

இந்த ரயிலை ஒரே நேரத்தில் 7 ஓட்டுநர்கள் இணைந்து தான் ஓட்ட முடியும்.

இந்த நீளமான ரயிலை 25 கிலோ மீட்டர் இயக்கி உலக சாதனை படைத்துள்ளது சுவிட்சர்லாந்து ரயில்வே.

ரேடியன் என்ற நிறுவனத்துடன் இணைந்து சுவிட்சர்லாந்து ரயில்வே இதனை சாதித்துள்ளது.

இந்த ரயில் போகும் பாதையில் , 22 சுரங்கங்கள் மற்றும் 48 பாலங்கள் உள்ளன.

இந்த ரயில் சுவிட்சர்லாந்தில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை கட்டி எழுப்ப உதவும் என்று கூறுகின்றனர்.