2022ம் ஆண்டின் இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.
துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று முதல் மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நீர்வள துறை மானிய கோரிக்கை மெது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.