உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாட்டம் நடைபெற்றது

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திட்டமலை, நம்பியூரில், உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக கல்லூரியின் நுகர்வோர் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சூரியகாந்தி அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார். கணிதத் துறை தலைவர் முனைவர் E.தமிழ்மணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் A.W. யூனஸ் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் சொக்கலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றி மாணாக்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வுகளை தெளிவாக விளக்கினார்கள். ஈரோடு மாவட்ட நுகர்வோர் நலன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு வெங்கடாசலம் அவர்கள் பங்கு பெற்று மிகவும் சிறப்பாக சிறப்புரை ஆற்றினார்கள். நுகர்வோர் மன்ற தலைவர் ஜீவிதா அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்கள். இவ்விழாவை வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் ‌யூனஸ் அவர்களும், வணிக நிர்வாகவியல் துறை ஆசிரியர் முனைவர் வாணி மற்றும் திரு வருண் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். இவ்விழாவிற்கு ஈரோடு மாவட்ட நுகர்வோர் நலன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குழு தலைவர் வெங்கடாசலம் அவர்களும், சங்க பொருளாளர் சித்ரா அவர்களும், சங்க உறுப்பினர் வேலுச்சாமி அவர்களும் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்தார்கள். இவ்விழாவை மாணவிகள் ஸ்ரீஜா, சுஷ்மிதா, செல்வ பிரியா மற்றும் சுவாதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள் இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டு இறுதியாக நாற்றுப் பண்ணுடன் நிறைவு பெற்றது.