பாம்பு கடித்து தொழிலாளி பலி..

கோவை;  கேரள மாநிலம் பாலக்காடு சித்தூர் பக்கம் உள்ள வண்டி தாவளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார் என்ற ரத்தினசாமி ( வயது 58) இவர் நெகமம் வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். நேற்று வேலை செய்து கொண்டிருந்த போது இவரது இரு காலிலும் பாம்பு கடித்தது. அதே இடத்தில் அவர் இறந்தார். இது குறித்து அவரது மனைவி வள்ளிநாயகம் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.