பாம்பு கடித்து தொழிலாளி சாவு..

கோவை மதுக்கரை பக்கம் உள்ள வழுக்குப்பாறை, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 38). கூலித்தொழிலாளி.இவர் கடந்த 21 ஆம் தேதி வழுக்குப் பாறை ஆனைக்கல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரது வலது காலில் பாம்பு கடித்தது . சிகிச்சைக்காக அரிசி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்தார். இது குறித்து அவரது மகன் சந்தோஷ்குமார் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.