குடிபோதையில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி…

கோவை சூலூரில் உள்ள பொம்மியம்மன் கோவில் அருகே குளத்தில்ஒருவர் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் சூலூர் எஸ். ஆர். எஸ். நகரை சேர்ந்த மகேஷ் குமார் ( வயது 38) என்பது தெரியவந்தது. கூலித் தொழிலாளியானஇவர் குடிப்பழக்கம் உடையவர். குடிபோதையில் குளத்துக்கு குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இவரதுமனைவி பிரியா சூலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.