சைக்கிள் மீது கிரேன் மோதி தொழிலாளி பலி

கோவை சுந்தராபுரம் சங்கம் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54) மெட்டல் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று புட்டு விக்கி ரோட்டில் சைக்கிள் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த கிரேன் இவர் மீது மோதியது. இதில் நாகராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அதே இடத்தில் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் சேலம் எடப்பாடியை சேர்ந்த கிரேன் டிரைவர் கார்த்திக் கண்ணன் ( வயது 27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.