கோவை சின்ன தடாகம் அருகே உள்ள உச்சனுர் ,தென்றல் நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சுதாகர் (வயது 30) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று ஆர். எஸ் புரம் காமராஜபுரம் 6-வது வீதியில் வசிக்கும் கிரிபிரசாத் என்பவரது வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி அனிதா ஆர் .எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0