கோவை மாவட்டம் வால்பாறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் காருண்யா சமூகநல அமைப்பின் சார்பாக சர்வதேச மகளிர் தினவிழா காருண்யாவின் இயக்குனர் அனிலா மேத்யூ தலைமையில் நடைபெற்றது. முன்னதாக காருண்யாவின் மகளீர் குழுக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வால்பாறை அஞ்சலகம் பகுதியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தொடங்கி வைத்தார் ஊர்வலம் நகர் பகுதி வழியாக காருண்யா சென்டர் சென்றடைந்தது அதன் பின்னர் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் சிறப்பு விருந்தினர்களாக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், பாரி அக்ரோ உதவி மேலாளர் பி.சி.அம்மு, நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த சர்வதேச மகளீர் தின விழாவில் மகளீர் குழுக்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் உணவு வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0