வீடு புகுந்து தாய், மகள் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கொள்ளை முயற்சி – பெண் கைது..!

கோவை அருகே உள்ள கே. கே. புதூர், நஞ்சம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது தாயார் தனலட்சுமி ( வயது 75 ) தங்கை பிரபா ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர் .அப்போது இவர்களைப் பற்றி முன்கூட்டி தெரிந்த ஒரு பெண் இவர்களது வீட்டில் புகுந்தார்.கதவை உள் பக்கமாக தான் போட்டுவிட்டு தனலட்சுமி , பிரபா ஆகியோரின் முகத்தில் மயக்க மருந்து “ஸ்பிரே ” செய்தார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார் அப்போது அவர்கள் இருவரும் சத்தம் போட்டதால் அந்தப் பெண் அங்கிருந்துதப்பி ஓடிவிட்டார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டூர் ராம்நகர் ,கண்ணன் மனைவி மீனாட்சி ( வயது 49) என்பவரை கைது செய்தனர் .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.