நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, திருவள்ளூர், ஆரணி, துாத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மேலும் 10 தொகுதிகளில் தி.மு.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம்.வலுவான வேட்பாளர்களை நிறுத்தி தி.மு.க. – அ.தி.மு.க.வுக்கு இணையாக அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தினால் இதை சாதிக்கலாம்.
இது தமிழகத்தில் பா.ஜ. ஆட்சி அமைப்பதற்கான அடித்தளமாக அமையும். மார்ச் 10-ம் தேதி கிருஷ்ணகிரி வந்த தேசிய தலைவர் நட்டாவிடம் தனியாக பேசும்போது இதை அண்ணாமலை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.’பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாவிட்டால் அ.தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்.
தி.மு.க. அரசு மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. ‘இதை பயன்படுத்த மூன்றாவது அணி அமைக்கலாம்’ என அண்ணாமலை வலியுறுத்தி வருவதாகவும் ‘கர்நாடக தேர்தல் முடிந்ததும் இது பற்றி பேசலாம்’ என நட்டா தெரிவித்ததாகவும் பா.ஜ.வினர் தெரிவிக்கின்றனர். 2014-ல் பா.ஜ. அமைத்த மூன்றாவது அணிக்கு 19 சதவீத ஓட்டுகளும் இரண்டு எம்.பி.க்களும் கிடைத்தனர். அதுபோல அ.தி.மு.க. இல்லாத 3வது அணியை அமைக்கும் திட்டத்தை மேலிடத்திடம் அண்ணாமலை முன்வைத்துள்ளார்.