கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தற்போதுமருதமலையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால்பக்தர்கள் நலன் கருதி மாலை 6 மணிக்கு மேல் மருதமலைக்கு மலைப்பாதை வழியாகவாகனங்களும் பக்தர்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வருகின்றன. நேற்று கோவிலை ஒட்டியுள்ள மலைப் பாதையில் 7 யானைகள் ரோட்டை கடந்து வனத்துக்குள் சென்றது..இதனால் அந்த வழியாக கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்கு துரத்தும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் நடமாட்டம் பக்தர்கள் மத்தியில் பெரும் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மருதமலையில் காட்டு யானைகள் நடமாட்டம். பக்தர்கள் பீதி.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0