கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாக வும் தனித்தனியாகவும் பல்வேறு பகுதிகளில் நடமாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு இரவு சுமார் 11 மணியளவில் வால்பாறை அருகே உள்ள முடீஸ் பஜார் பகுதியில் புகுந்த ஒரு குட்டியுடன் புகுந்த நான்கு காட்டுயானைகள் கொண்ட கூட்டம் அங்குள்ள கண்ணன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர்களின் மளிகை மற்றும் பலசரக்கு கடை களை உடைத்துதள்ளி உள்ளிருந்த பொருட்களை இழுத்து சேதப்படுத்தியுள்ளது. சத்தம் கேட்டு எழுந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி சத்தம்போட்டு நீண்ட போராட்டத் திற்கு பின்பு காட்டுயானைகளை அப்பகுதியிலிருந்து விரட்டியுள்ளனர் மேலும் அப்பகுதி யிலுள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த பத்து நாட்களுக்கு மேல் எரியாமல் அப்பகுதி இருண்ட நிலையில் இருந்ததால் யானைபுக காரணமாக இருந்ததாகவும் எனவே சம்பந்தப் பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0