யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். பெலிக்ஸை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார், திருச்சி 3 வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தினார்கள். அப்போது வாதங்களை கேட்டு அறிந்தபின் நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணலில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை காண வேண்டும் எனக் கூறியதுடன், வரும் 27 ஆம் தேதி வரை பெலிக்ஸை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பெலிக்ஸ் தற்போது திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்பெலிக்ஸ் ஜெரால்டு கைது தொடர்பாக அவரது மனைவி ஜோன் தலைமைச்செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “எனது கணவர் பெலிக்ஸ் ஜெரால்டு நெறியாளர் என்பதற்காக சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த வழக்குகளில் உடன் வழக்காளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனது கணவர் அந்த பேட்டியை எந்த உள்நோக்கத்துடனும் பதிவு செய்யவில்லை. இந்த நேர்காணலை பதிவு செய்ததற்காக கடந்த நேற்று (மே 15ம் தேதி) நான் வருத்தம் தெரிவித்துள்ளேன். அந்த காட்சியும் நீக்கப்பட்டுவிட்டது. எனது கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருக்கிறது.
கடந்த மே 14-ம் தேதி நடத்தப்பட் ட சோதனையில், வழக்குடன் தொடர்பில்லாத எங்கள் சொத்து ஆவணங்கள், புகைப்படக்கருவிகள், கணிப்பொறிகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதனால், எங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, பெலிக்ஸ் ஜெரால்டு மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெற்று, அவர் சிறையில் இருந்து விடுதலை பெற வழிவகை செய்ய வேண்டும். விசாரணை என்ற பெயரில் போலீசார் எங்கள் வீட்டில் வந்து அச்சுறுத்துகின்றனர், எங்களை போலீஸ் துன்புறுத்துகிறது. நடந்த சம்பவத்துக்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டோம். எனவே எங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது” இவ்வாறு பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஜோன் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக கைது செய்யப்படுவதற்கு முன்பு, பெலிக்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு இன்று, நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெலிக்ஸ் ஜெரால்டு கடந்தவாரமே கைது செய்யப்பட்டு விட்டதால், முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சக்திவேல் யூடியூபர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுவிட்டதால் அவரின் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறி பெலிக்ஸ் ஜெரால்டின் மனுவை தள்ளுபடி செய்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0