விருதுநகர் முழுவதும் பரவலான மழை- மகிழ்ச்சியில் பொது மக்கள்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் கடுமையாக அடித்தது பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்தது மழை பெய்தது தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்த மழையினால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியது.  சத்திரப்பட்டி தளவாய்புரம் செட்டியார்பட்டி முகவூர் சேத்தூர் தேவதானம் கோவிலூர் சொக்கநாதன் புத்தூர் நல்ல மங்கலம் புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்..