உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்த சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவர் கூறியுள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மென்மேலும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்து சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவரான மரியா வான் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, அடுத்தடுத்த கொரோனா மாறுபாடுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல் திறன் குறையக்கூடும் என்று கூறியுள்ளார். மேலும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பொதுமக்கள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை மிகக் கடுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.