என்னது!! ஒரே நேரத்தில் 100 மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனை ஒத்திவைப்பு – எலான் மஸ்க் விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய ராக்கெட்டின் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகப்பெரிய விண்கலமான ஸ்டார் ஷிப் தனது முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ள இருந்தது.

இதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் விண்கலம் வானில் பறப்பதற்கு 40 நொடிகளுக்கு முன்னதாக ராக்கெட்டின் சோதனை முயற்சி திடீரென கைவிடப்பட்டது.

100 மனிதர்களை ஒரே நேரத்தில் விண்வெளிக்கு அழைத்து செல்லும் வகையில் எலான் மஸ்க் நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த ராக்கெட் 400 அடி உயரம் கொண்டது. ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இருந்த பிரஷர் வால்வ் செயல்படாததே ராக்கெட் பயணம் திடீரென ரத்து செய்ததற்கான காரணம் என எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அடுத்த ஓரிரு தினங்களில் இந்த விண்கலத்தை மீண்டும் சோதனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.