கொரோனா பரவல் காரணமாக அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால் அதற்குள் நான்காவது அலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போதும் அதன் பாதிப்ப குறையவில்லை.
உலகநாடுகளில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய போது சீனா தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொண்டு பாதிப்பை குறைத்தது தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சீனாவின் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு நாளொன்றுக்கு 3, 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வட கிழக்கு நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 19 மாகாணங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பாதிப்பு அதிகரிப்பதனால் அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும் என்றார்கள்.இந்நிலையில் நான்காவது அலை குறித்த அறிவிப்பை இந்திய நிபுணர் குழு தலைவர் வெளியிட்டிருக்கிறார். ஜூன், ஜூலை மாதங்களில் கண்டிப்பாக அதிகமாக வாய்ப்புள்ளதாக இந்திய கொரோனா நிபுணர் குழு தலைவர் இக்பால் கூறியுள்ளார்.
மேலும் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும் என்றும் அதனால் பாதிப்பு மிகக் குறைந்த அளவே இருக்கும் என கூறியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத் தேர்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பமாக உள்ள ஜூன் மாதம் தொடங்கும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.