மேற்கு வங்கத்தினை இனிமேல் பங்களா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவாய்… நாடாளுமன்றத்தில் இன்று முன்மொழிந்த மத்திய அரசு.!

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற கோரி மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

இன்று நாடாளுமன்றத்தில் ஓர் முக்கியமான முன்மொழிவு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் மாற்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு, 2016ஆம் ஆண்டு முதலே மாநிலங்களுக்கு பெயர் மாற்றும் முறை மாற்றியமைக்கபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ராய், ‘ கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரியதற்காக மறுப்பு இல்லா சான்றிதழ் (NOC) வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அடுத்ததாக தான் பெயர் மாற்றப்படுமா என்பது பற்றி தெரியவரும்.