பட்டியலினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் உரையை நிகழ்த்துவது, நாட்டிற்கே பெருமை என பிரதமர் மோடி பேட்டி.
டெல்லியில் நாடாளுமன்றத்தில், பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் நிகழ்வானது நடைபெறவுள்ளது. இதில் ஐந்தாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் அமைய உள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக நடப்பு பட்ஜெட் இருக்கும். நாட்டுக்கும் அதன் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே மத்திய அரசின் நோக்கம். மத்திய பட்ஜெட்டை ஒரு பெண் அமைச்சர் தாக்கத் செய்ய உள்ளதை உலகமே உற்று நோக்க உள்ளது.
இந்த கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் தங்கள் குரலை எழுப்பலாம். ஆனால் விவாதங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எதிர் கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் தனது முதல் முறையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று. பட்டியலினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் உரையை நிகழ்த்துவது, நாட்டிற்கே பெருமை. குடியரசுத்தலைவரின் உரை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.