சிறுவாணி அணையில் நீர்மட்டம் 42 அடியாக உயர்வு. தண்ணீர் திறப்பு.

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகேஅடர்ந்த வன பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர் மட்டும் இல்லாமல் வழி ஒர கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுவாணி அணையில் முழு கொள்ளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. .அதன் பிறகு அணை நீர்மட்டம் 45 அடியை தாண்டி முழு கொள்ளளவை எட்டுவதற்குள் கேரளா அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டு விடுகிறார்கள். இது குறித்து கேரள அதிகாரிகளிடம் கேட்டால் கேரளாவில் வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டதால் எந்த அணையும் முழு கொள்ளளவை எட்டும் முன்பே தண்ணீரை திறந்து விட்டு விடுகிறோம் என்று கூறுகிறார்கள். கடந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் முழு அளவு எட்ட கேரளா அதிகாரிகள் விடவில்லை. இதனால் மார்ச், ஏப்ரல் மாதத்தில் கோவை மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு ப் பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியது உடனே கேரள பொதுப் பணித்துறை அதிகாரிகள் சிறுவாணியில் இருந்து அதிக அளவு தண்ணீரை அணை மதகு வழியாக திறந்து விட்டு வெளியேற்றினர்.. இதை அறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாளுடன் சிறுவாணி அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கேரள பொது பணித்துறை அதிகாரிகளிடம் சிறுவாணி அணையின் இருந்து வீணாகதண்ணீர் திறப்பதை குறைத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை குறைக்கும் வகையில் தண்ணீரை திறக்கும் அளவு ஒரு நாளைக்கு 25 எம்.எல்.டி. குறைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:- சிறுவாணி அணையில் 45 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க கேரளஅரசு கூறியுள்ளது. இந்த நீர்மட்ட அளவை கூட்டுவது குறித்து இரு மாநில அரசுகள் பேசி முடிவு செய்யும். தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 25 எம்.எல்.டி. குறைக்கப்பட்டுள்ளது. 45 அடி நீர்மட்டம் உயர்வதற்கு எந்த தடையும் இல்லை என்று கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். கோடைகாலத்தை கருதி தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகருக்கு நேற்று 101 எம் எல் டி குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கூறினார்.