ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் வக்ஃப் திருத்த சட்ட மசோதா மாநாடு

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் எஸ் டி பி ஐ கட்சியின் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தெற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டிக்கும் விதமாக வக்ஃப் மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நவவி மற்றும் மாநிலச் செயலாளர் பாஸ்டர் வி மார்க் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து உரையாற்றினர்.

முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கக் கூடிய செயலை ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த திருத்த சட்டத்தை முறியடிப்பது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கடமை என்றும் கூறினர். அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இம்மாநாட்டிற்கு பொதுமக்கள் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.