தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களின் உறுதிமொழி ஏற்பு பேரணி…

சூலூர் தொகுதி மக்களிடையே வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஆகிய மக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின்மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம் என்றும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்ச இன்றி மதம், இனம், சாதி சமூக அல்லது வேறு ஏதேனும் தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று உறுதி அளித்து பேரணியை துவக்கினர் வாக்களிப்பதற்கு பதிவு செய்ய வருடத்துக்கு நான்கு வாய்ப்புகள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் 1ஆம் தேதி படிவம்6ஐ நிரப்பி வாக்காளராக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பேரனின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது பேரணி ஆர் வி எஸ் என் சி சி மாணவர்களோடு நடைபெற்றது.