கோபி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக இரண்டு நாள் விரிவாக்க நிகழ்வு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருப்பொருளை உணர்த்தி நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு புஞ்சைத்துறையம்பாளையம் ஊராட்சி பங்களாப்புதூர் அருகே உள்ள அண்ணாநகர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சேகர் மற்றும் துணைத் தலைவர் திரு. வெங்கடேஸ்வரன் அனுமதி வழங்கி உறுதுணையாக இருந்தனர். அண்ணா நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமையில் தன்னார்வலர்கள் கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். மேலும் நுகர்வோர் உரிமை தினத்தினை ஒட்டி அண்ணாநகர் கிராமத்தில் உள்ள மளிகை கடைகளுக்கு வரும் நுகர்வோர்களுக்கு அவர்கள் வாங்கக்கூடிய பொருட்களின் தன்மை மற்றும் அவர்கள் எதை எதை எல்லாம் கவனித்து வாங்க வேண்டும் என்பதை தன்னார்வலர்கள் நுகர்வோர்களுக்கு உணர்த்தினர். இந்த நிகழ்வுகளுக்கு அண்ணாநகரைச் சார்ந்த அரசு விளம்பரத்துறையில் பணியாற்றி வரும் திரு.சக்திவேல் உறுதுணையாக இருந்து தன்னார்வலர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். தன்னார்வலர்கள்
மாலை நேரத்தில் அண்ணாநகர் கிராம கோவில் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த இரண்டு நாள் நிகழ்வினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் திரு. கிருஷ்ணகுமார் மற்றும் திரு.அஜித் குமார் ஒருங்கிணைத்தார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0