கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் நினைவு அஞ்சலி.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் ஆகிறது. வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.அதன் ஒரு பகுதியாக பேரூர் படித்துறையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் பெயர்களை சொல்லி திதி கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்த அமைப்பை சேர்ந்த சிவலிங்கம் கோட்டச் செயலாளர் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ரவிந்திரன் மாத்ரு சக்தி இணை அமைப்பாளர் கௌசல்யா விக்னேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளிங்கிரி செல்வபுரம் பிரகண்டச் செயலாளர் திருப்பதி ராம் நகர் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.