ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் வணிகவியல் துறையின் சார்பில் கிராமத்து சந்தை விழா..!

ஆராய்ச்சி மற்றும் வணிகவியல் துறையின் சார்பில் கிராமத்து சந்தை திருவிழா சனிக்கிழமை நடந்தது. இவ்விழாவின் முதல் நிகழ்வாக கல்லூரியின் முதல்வர். அ .மோகனசுந்தரம் தலைமையில், விழாவின் சிறப்பு விருந்தினராக கம்பன் கல்லூரி, முதல்வர், சுல்தான் பேட்டை, கோயமுத்தூர், முனைவர். கே .எம். சின்னதுரை அவர்கள் விழாவினை துவக்கி வைக்க துணை முதல்வர் மற்றும் வணிகவியல் துறையின் தலைவரும் முனைவர் .சி. நஞ்சப்பா ஆகியோர் முன்னிலையில் விழா துவங்கியது.

இவ்விழாவின் முக்கிய நோக்கமான மாணவ மாணவிகளின் தனித்திறன் மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக மாணவர்களே பொருட்களை பெற்று வந்து அவர்களே பொருட்களின் விலை நிர்ணயம் செய்வதும், வாடிக்கையாளர்களை வரவேற்பதும், வலைதளம் வர்த்தகம் செய்வதும், வாடிக்கையாளர்களின் முன்னிலையில் பொருட்களை உற்பத்தி செய்வதும், பின் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுப் பொருட்களின் சுவைகளை கூட்டுவதும், குறைப்பதும் என அனைத்து முயற்சிகளும் செய்து விழாவினை வெற்றி பெற செய்தனர்.

மேலும் இவ்விழாவின் வணிகவியல் துறையை சார்ந்த சுமார் 70 க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டது.

உணவு சம்பந்தமான விற்பனை நிலையங்கள், துணி வகைகள், நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள், தொலைபேசி உதிரி பாகங்கள் விற்பனை நிலையம், அலங்கார பொருட்கள் விற்பனை நிலையங்கள் என பலதரப்பட்ட விற்பனை நிலையங்கள் மாணவர்கள் செய்து வந்தனர்.

இவ்விழாவின் பார்வையாளர்களாக பாலிடெக்னிக், நர்சிங், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பாரா மெடிக்கல், இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளைச் சார்ந்த சுமார் (1000) ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.