அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டுள்ளது.
சென்னை காவிரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று முன்தினம் பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்றது.
இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ரகுராம் தலைமையிலான ஆறு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது . தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதுதான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்றும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டு இயல்பாக சுவாசிக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரால் உட்காரவும், பேசவும் முடிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திரவ உணவுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்கொள்ள தொடங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.