வேலூர் காவல் அதிகாரிகள் யோகா பயிற்சி..!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று வேலூர் காவலர் மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் ஆயூதப்படை காவல் அதிகாரிகளுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். பின்னர், யோகா செய்வதால் உடலை வலிமைப்படுத்தவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் முடியும் என்று கூறி காவலர்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவுரை வழங்கினார்.