ஆட்டோ ஓட்டுனருக்கு தங்களின் சுய விவரங்களை வாகனங்களில் கற்றுக்கொள்ளவேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13ம் தேதி நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம் பெண் மருத்துவரை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்முறை செய்வது. இதையடுத்து அந்த மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர் இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளர். மேலும் வேலூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பின்புறம் ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் உரிமையாளர் பெயர் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை ஓட்டப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதைப்போல ஆட்டோவின் உள்ளே பயணிகளுக்கு தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கடைப்பிடிக்க மறுப்போரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யபடுவதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.