திருச்சியில் சமூக நலத்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நடத்தும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை பகலும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டங்கள் பற்றியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா பற்றிய விழிப் புணர்வு ஏற்படுத்தவும் 29 8 2024 முதல் 10 9 2024 வரை எல்இடி பொருத்திய விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஆ விஜயலட்சுமி மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் திருச்சி துறையூர் பணியாளர்கள் மகளிர்க்கு அதிகாரம் அளித்தல் மையம் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.