அரசு வழங்கிய வீட்டுமனை 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது.

காஞ்சிபுரம் மாவட்டம் திரு முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் இவருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அவர்களால் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய விஏஓ கருணாகரனை அணுகிய குமரவேல் ஐயா பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து விடுங்கள் என கெஞ்சினாராம் குமரவேலை ஒரு புழுவை போல் பார்த்த கருணாகரன் யோவ் போயா போய் 20 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வா என அலட்ச சியமாக பேசினாராம் குமரவேலோ உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் கடனும் உடனும் பட்டு ஒரு ரூ 15 ஆயிரம் ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறேன் என கெஞ்சினார் கிராம மக்களும் குமரவேலிடம் காஞ்சிபுரத்திற்கு போய் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடு என அட்வைஸ் செய்தனர் குமரவேலு ம் ஊர் மக்களின் ஆலோசனையை கேட்டு காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப் பிரெண்ட் அவர்களிடம் புகார் கொடுத்தார் அதன் பேரில் ரூபாய் 15 ஆயிரத்தை ரசாயனம் தடவி கொடுக்க செய்தனர். குமரவேலு ம் திருமுக்கூடல் சாலவாக்கம் சாலையில் அருங் குன்றம் பகுதியில் விஏஓ கருணாகரனிடம் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது மாறுவேடத்தில் கைலி அணிந்திருந்த டிஎஸ்பி கலைச்செல்வன் கருணாகரனை லபக்கென்று பிடித்து கைது செய்தனர் கருணாகரனும் நான் தெரியாமல் செய்து விட்டேன் என்னை விட்டு விடுங்கள் என கதறி அழுதார்.