ஸ்கூட்டி மீது வேன் மோதல். கோவை போலீஸ் ஏட்டு மனைவி பலி. 2குழந்தைகள் படுகாயம்.

கோவை அருகே உள்ள சின்ன தடாகம் மேற்குவீதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது37) கோவை மாநகர ஆயுதப் படையில் போலீஸ்ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (வயது35) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் பவித்ரா நேற்று தனது மகள் அன்பு (வயது 4) தனசேகரனின் அண்ணன் சுரேஷ்குமாரின் மகள் கயல் (வயது 8) ,ஆகியோருடன்ஸ் கூட்டியிலும், தனசேகரன் தனது மற்றொரு குழந்தை மற்றும் சுரேஷ்குமாரின் மற்றொரு குழந்தையுடன் மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டு மேட்டுப்பாளையம் அருகே டீச்சர்ஸ் காலனியில் உள்ள பவித்ராவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். இதை யடுத்து மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள கல்லாறுபழ பண்ணைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். கல்லாறு ரயில்வே கேட் பகுதியில் வந்த போது எதிரே வேகமாக வந்த ஒருஈச்சர் வேன் திடீரென பவித்ரா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பவித்ரா அதே இடத்தில் பலியானார். மேலும் படுகாயம் அடைந்த குழந்தைகள் அன்பு, கயல் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துநீலகிரி மாவட்டம் கூடலூர், குயில் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த வேன்டிரைவர் அனு (வயது 31 )என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.