கோவை: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 38) இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் பைக்கில் உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பின்னால் உடுமலை தாராபுரம் ரோட்டைசேர்ந்த ஜெகநாதன் ( வயது 38) என்பவர் இருந்தார். அங்குள்ள நூற்பாலை அருகே பைக் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒருவேன் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது . இதில் மணிகண்டன் ,ஜெகநாதன், ஆகியோர் படுகாயம் அடைந்தனர் .அவர்களை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல்சிச்சுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் வங்கி மேனேஜர் மணிகண்டன் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் ,புங்க முத்தூர் கரட்டு மடத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் முருகன் ( வயது 33) கைது செய்யப்பட்டார் .மேலும் விசாரணை நடந்துவருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0