வால்பாறை – நடுமலை எஸ்டேட் கள நடத்துனர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.14 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு இருவர் கைது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் கள நடத்துனராக பணி புரிந்து வருபவர் ரவி சாம்சன் இவர் கடந்த 8 ஆம் தேதியன்று தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று விளையாட்டு நேற்று 11 ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த தனது இரண்டு செல்போன்கள், டார்ச் லைட் மற்றும் புளுடூத் ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போய்விட்டதாக வால்பாறை காவல்நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விசாரணை செய்ததில் நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த பூபதி என்பவரின் மகன் குகநாதன் வயது 18 மற்றும் பன்னிமேடு எஸ்டேட்டை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் ஸ்ரீ ராம் வயது 19 ஆகியோர்கள் மேற்கண்ட பொருள்களை திருடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து. பொள்ளாச்சி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.