கோவை மாவட்டம் வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வளா கத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 38 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா வருகிற 20,21,22 வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற உள்ள நிலையில் நேற்று திருக்கொடியேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக நடைபெறும். இந்த மண்டல பூஜை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் டி.கதிரவன், தலைவர் ஏ.டி.மூர்த்தி, செயலாளர் சந்திரன்,பொருளாளர் ஆர்.அழகர்சாமி என்ற அழகிரி,விழா ஆலோசகர் வழக்கறிஞர் த.பால்பாண்டி மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் துரிதமாக செய்து வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0