கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் வால்பாறை நகராட்சியின் நான்காவது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆர் என்ற பாஸ்கர் தனது வார்டுக்கு உட்பட்ட லோயர்பாரளை அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலன் கருதி அந்த மையத்திற்கு தேவையான குக்கரும், புதுத் தோட்டம் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு தேவையான பாய்களும், சவராங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள 25 மாணவர்களான குழந்தைகளுக்கு தேவையான சாப்பாட்டு தட்டு மற்றும் டம்ளர்களையும் வழங்கி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார் இவரின் சேவை யை அங்கன்வாடி மைய பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்களும் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர் இந்நிகழ்ச்சியில் 4 வது வார்டு செயலாளர் தனசேகரன், லோயர் பாரளை ராஜேந்திரன், சுரேஷ், பேபி, கர்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0