கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எம்ஜிஆர் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் 41 ஆம் ஆண்டு வசந்த பஞ்சமி திருவிழாவை முன்னிட்டு கடந்த 29 ஆம் தேதி திருக்கொடியேற்றம் நடைபெற்றது அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையும் நடுமலை ஆற்றிலிருந்து மேள வாத்தியம் முழங்க சக்தி கும்பம் எடுத்து வரப்பட்டது அதைத்தொடர்ந்து நேற்று அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் இருந்து மேள வாத்தியம் முழங்க எம்ஜிஆர் நகர் மற்றும் இந்திரா நகர் மகளிர் அணியினர் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது அதைத்தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது வெகு சிறப்பாக நடை பெற்றுவரும் இவ்விழா ஏற்பாடுகளை தலைவர் வெள்ளைச்சாமி, செயலாளர் அர்ச்சுணன், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் கார்த்திக், துணைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் விழா பொறுப்பாளர்களும், எம்ஜிஆர் நகர் மற்றும் இந்திரா நகர் இளைஞர் அணி பொறுப்பாளர்களும் செய்துள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0