ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதிகளில் ஏற்கனவே இந்திய வன பாதுகாப்பு சட்டம், தமிழக வனபாதுகாப்பு சட்டம், தனியார் வனபாதுகாப்பு சட்டம் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தமிழ்நாடு 34.S.O.2143(E) DRAFT NOTIFICATION, ECO SENSITIVE ZONE அறிக்கையை தமிழக அரசின் முதன்மை வன அதிகாரி ராஜேஷ்குமார் வெளியிட்டு இருப்பதையும் புலிகள் காப்பகத்தின் வழி வட்டத்தில் இந்த சூழல் அமைவதால் பொதுமக்களுக்கும் வால்பாறை பகுதி வளர்ச்சிக்கும் பாதகமான சூழ்நிலை உருவாகும் உண்மை நிலையை எடுத்துக் கூறி அதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்த வால்பாறை பாஜகவின் மண்டல் நிர்வாகிகள் அதற்கான மனு அளித்துள்ளனர் இதனைத்தொடர்ந்து தமிழக முதன்மை வனத்துறை அதிகாரி மூலமாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கிடம் நேரடியாக எடுத்துக்கூறி வால்பாறை பகுதி மக்களின் நலன் கருதி நிரந்தர தீர்வு காண்பதற்கு உரியமுறையில் வழிவகை செய்து கொடுப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித் துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் இந்நிகழ்வின் போது வால்பாறை மண்டல் தலைவர் பாலாஜி தலைமையில் மண்டல் பார்வையாளர் கே.எம்.தங்கவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எல்.சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0