கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள லெஜன்ட் கிரிக்கெட் கிளப்பின் முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி வால்பாறையிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் இறுதிப்போட்டிக்கு வால்பாறை காமராஜ் நகர் அணியும் சேடல் டேம் அணியும் தகுதியான நிலையில் இறுதிப்போட்டியில் சேடல் டேம் அணி வெற்றி பெற்றது அந்த அணிக்கு முதல்பரிசு கோப்பையுடன் அதிமுக தொழிற்சங்கத்தின் தலைவர் வால்பாறை வீ.அமீது சார்பாக ரூ.10 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது பரிசு பெற்ற வால்பாறை காமராஜர் நகர் அணியினருக்கு கோப்பையுடன் லெஜன்ட் கிரிக்கெட் கிளப்பின் சார்பாக ரூ 5 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசு பெற்ற வாட்டர் பால்ஸ் அணியினருக்கு கோப்பையும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழிற் சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது வழங்கி வாழ்த்து தெரிவித்தார் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த லெஜன்ட் கிரிக்கெட் கிளப்பின் சார்பாக நடைபெற்ற இந்த போட்டியை அதன் நிர்வாகிகள் மணிகண்டன், சித்திக்,சூர்யா,ஜீவா,விக்கி,சைலேஷ் மற்றும் பலர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நிலையில் விளையாட்டு வீரர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0