கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் திருக்கோவில் 40 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 18 ஆம் தேதி திருக்கொடிற்றியதைத்தொடர்ந்து இன்று 25 ஆம் தேதி முதல் நாளான நேற்று காலை தீர்த்தம் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஆலயம் சென்றடைந்தது மாலை 5 மணி க்கு மேல் ஸ்ரீ முனீஸ்வரனுக்கு தெப்பக்குளம் சென்று கங்கை அம்மனின் சக்தி கரகம், சூர்யா பூசாரி பறவை காவடி பூட்டி கரக பட்டத்துடன் வானவேடிக்கை முழங்க கோவில் வந்தடைந்தது அதைத்தொடர்ந்து கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டிகள் முருகன், மயில்வாகனம், தங்கமுத்து மற்றும் கோவில் கமிட்டிகளுடன் ஊர் பொது மக்களும் செய்திருந்த நிலையில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0