வால்பாறை புனித வனத்துசின்னப்பர் ஆலயத்தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர் பாணியில் அமைந்த புனித வனத்துசின்னப்பர் ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த ஆண்டு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி திருவிழா திருப்பலியைத்தொடர்ந்து ஆடம்பர தேர்திருவிழாவும், 9 ஆம் தேதி திருவிழா திருப்பலி மற்றும் அன்பின் விருந்து நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெறுவதை முன்னிட்டு இன்று காலையில் கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றதை தொடர்ந்து கருமத்தம்பட்டி ஜெபமாலை தியான மையத்தின் இயக்குனர் அருட்பணி அலெக்ஸ் ஆண்டனி தலைமையில் ஆலயத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றி வைக்கப்பட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தந்தையர்கள் சபை, அன்பியபொறுப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் துரிதமாக செய்து வருகின்றனர்.