வால்பாறையில் நகர் மன்ற அவசர கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வளர்ச்சி பணிகள் நடைபெற தீர்மானம் நிறைவேற்றம்..!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அரங்கில் நகர்மன்ற அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் நகர்மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தின் தொடக்கத்தில் வால்பாறையில் வணிக வளாகம் அமைக்கும் பணிக்கு ரூ.9 கோடியும், வாகனம் நிறுத்துமிடம் கார் பார்க்கிங் அமைக்க ரூ.6 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், நகர் புற மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கோவை பொறுப்பு அமைச்சர் வி.செந்நில் பாலாஜி மற்றும் பெரும் முயற்சி மேற்கொண்ட கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆகியோர்களுக்கு மன்றத்தின் மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருத்திய உத்தேச மதிப்பீடு மற்றும் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவிற்கான உத்தேச மதிப்பீடு உள்ளிட்ட 34 வளர்ச்சி பணிகளுக்கான ஒப்புதலில் படகு இல்லம் ஒப்பந்த புள்ளிக்கான பொது ஏலத்தை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டநிலையில் வார்டு எண் 12 ல் கருமலை முதல் அக்காமலை செல்லும் சாலை இருபுறங்களிலும் தரைமட்ட கால்வாய் அமைக்கும் பணி ரூ.19 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டிலும், வால்பாறை நகராட்சி குடிநீர் வழங்கும் பணிக்கு தேவையான குழாய்கள் மற்றும் உதிரிபாகங்கள் விநியோகம் செய்யும் பணிக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் உள்ளிட்ட 33 பணிகள் செய்வதற்க்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது மேலும் அனைத்து வார்டு பகுதிகளிலும் தொடர்ந்து நிலவும் தெருவிளக்கு பிரச்சினைகளை தீர்க்கவும் தேவையான வளர்ச்சி பணிகள் செய்யவும் மன்றத்தில் உள்ள அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் முடிவெடுக்கப்பட்டு கூட்டம் முடிவடைந்தது இந்த அவசர கூட்டத்தில் ஒரு சிலரை தவிர மீதமுள்ள அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..