வால்பாறை – நடுமலை எஸ்டேட் சமாதானபுரம் நிழல் கூரை ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சீரமைக்க பூமி பூஜை

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி 13 வது வார்டுக்கு உட்பட்ட நடுமலை எஸ்டேட் சமாதானபுரம் பகுதியில் மிகவும் பழுதடைந்த பயணிகள் நிழல் கூரையை சீரமைக்க அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரியிடம் பொதுமக்கள் தொடர்ந்து. விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தியதைத் தொடர்ந்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிக்கான அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி தலைமையில் நகர் மன்ற துணைத் தலைவர் த.ம.ச.செந்தில் குமார், இளநிலை பொறியாளர் கோபிகா, பணி மேற்பார் வையாளர் பொறுப்பு ரமேஷ், அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழல் கூரை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பணி ஒப்பந்ததாரர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.