வால்பாறை – அக்கா மலை எஸ்டேட் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்ட பூமி பூஜை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் கடை பகுதியில் பேருந்து திரும்பும் குறுகிய சாலையோரப் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாமல் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் திரும்புவதற்கு பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையை சம்பந்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் அன்பரசனிடம் எடுத்துக்கூறி அப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டித்தர பொதுமக்களும் பேருந்து உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் அதைத்தொடர்ந்து நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையிலான நகர்மன்ற கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களின் நலன் கருதி ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்கட்ட பணி ஆணையும் வழங்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், திமுக நகர துணைச்செயலாளர் சரவண பாண்டியன், நகராட்சி இளநிலை பொறியாளர் கோபிகா, பணி மேற்பார்வையாளர் பொறுப்பு ரமேஷ், முன்னால் நகர் மன்ற உறுப்பினர். செல்வம்,12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இ.ரா.சே.அன்பரசன்,ஒப்பந்ததாரர் தனசேகர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்று பணியும் தொடங்கி வைக்கப்பட்டது இதேபோல மற்றொரு பகுதியான பலாமரத்து பகுதி சாலையோரம் தடுப்பு சுவர் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்ததாரர் மணிக்கு மார் பணிசெய்ய அதற்கான பூமி பூஜையும் செய்து பணி தொடங்கி வைக்கப்பட்டது இதனால் அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.