வால்பாறை – அண்ணா நகர் ஸ்ரீ ராமர் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருக்கொடியேற்று விழா

கோவை மாவட்டம் வால்பாறை – அண்ணா நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி திருக்கோயிலின் 47 ஆம் ஆண்டு திருவிழா எதிர்வரும் 12, 13, 14 மற்றும் 15 ஆகிய நான்கு தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற இருப்பதை முன்னிட்டு நேற்று திருக்கொடி யேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழச்சியில் அண்ணா நகர் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தர்மகர்த்தா தர்மலிங்கம் திருக்கொடியேற்றிவைத்து சிறப்பித்தார் முன்னதாக ஸ்ரீ ராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்து அனைவரும் வழிபாடு செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா தர்மலிங்கம், தலைவர் வடைக்கடை குட்டி என்ற தமிழ்செல்வன், பொருளாளர் சிவரஞ்சன், செயலாளர் நாகரத்தினம் என்ற குட்டி, கோவில் பூசாரிகள் சதாசிவம், பொன்னம்பலம், ராமகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்களும் துரிதமாக செய்து வருகின்றனர்.